search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன்
    X
    செல்போன்

    மதுரையில் மின்தடை குறித்த புகார்களை செல்போனில் தெரிவிக்கலாம்

    மின்தடை, மின் கணக்கீடுகளில் குறைபாடு, மின்கசிவு, மின்கடத்தி அறுந்து கிடப்பது ஆகியவை தொடர்பான புகார்களை மின்நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண்-94987 94987 நம்பரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    மதுரை:

    மதுரை மண்டல மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம் இருந்து வரும் புகார்களை ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் (அலைபேசி எண்: 9498794987) அமைக்கப்பட்டு உள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படும்.

    இதில் மின்தடை, மின் கணக்கீடுகளில் குறைபாடு, மின்கசிவு, மின்கடத்தி அறுந்து கிடப்பது ஆகியவை தொடர்பான புகார்களை மின்நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண்-94987 94987 நம்பரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இங்கு பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் உடனடியாக அனுப்பப்படும்.

    இது சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குரூப்பிற்கும் அனுப்பப்படும்.

    அதன் மீது அதிகாரிகள் கள ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தப் புகார் மீதான தீர்வு பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர் மூலம் வட்ட அளவில் செயல்படும் மின்னகத்திற்கு வாட்ஸ்அப் (கட்செயலி) மூலம் தெரிவிக்கப்படும்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் உறுதிபடுத்தப்பட்டு, புகார்கள் முடித்து வைக்கப்படும்.

    மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான புகார் மற்றும் உதவிக்கு மின் நுகர்வோர் சேவை எண்ணை (9498794987) தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.

    மேலும் பொதுமக்கள் மின் இணைப்பு தொடர்பான சரியான தொலைபேசி எண்ணை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் சரிபார்த்து தேவையெனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    இதன் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் மாதாந்திர மின் பராமரிப்பு, மின் தொடர் செயலிழப்பு, மின்தடை, மின்நுகர்வோர் கட்டணம் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×