search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    சென்னையில் யோகா ஆசிரியர் மீது பாலியல் புகார்

    யோகா ஆசிரியர் தவறாக நடந்ததாகவும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மருத்துவ துறையில் பணியாற்றும் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த யோகா மையம் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சிக்காக சேர்ந்தார். அந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் யோகா கற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் யோகா ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்ததாகவும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மருத்துவ துறையில் பணியாற்றும் மாணவி புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் அளித்த புகார் வருமாறு:-

    யோகா வகுப்பில் சேர்ந்த நாள் முதல் “பாட்னர் யோகா” என்ற பெயரில் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களையும் தொட்டு செக்ஸ் தொல்லை கொடுத்தார். வாட்ஸ்அப் மூலமாக என்னை காதலிப்பதாக தகவல் அனுப்பினார்.

    கோப்புப்படம்


    நான் இதுபோன்று செய்யக்கூடாது என கூறியும் கேட்கவில்லை. இரட்டை அர்த்தத்துடன் என்னிடம் பேசி வந்தார். அதுபற்றி கேட்டபோது, “அது ஆன்மீக ஞானம்” என்று தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு பிறந்த நாள் என்று கூறி வீட்டுக்கு அழைத்தார். வீட்டில் அனைவரும் வெளியில் சென்று விட்ட நிலையில் நானும் புறப்பட்டேன். அப்போது எனக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்தார். அதை வாங்கி குடித்த பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

    மயக்க நிலையில் இருந்த என்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார்.

    பின்னர் அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். அதனை வைத்து பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார். இதை காட்டி பணமும் பறித்துள்ளார்.

    யோகா ஆசிரியரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளது. கடந்த மாதம் 25-ந்தேதி நான் பணிபுரியும் இடத்துக்கு வந்த அவர் நான் சொல்வதை கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    யோகா ஆசிரியரின் செல்போனில் உள்ள எனது ஆபாச வீடியோக்களை அழிப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×