search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 529.90 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் தகவல்

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அப்போது அமைச்சர்மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: -

    தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 

    அந்த வகையில் மாவட்டத்தில் 46,903 விவசாயிகளுக்கு ரூ. 529.90 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 40,907 விவசாயிகளுக்கு ரூ. 451.88 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார். 

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.வினீத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீனிவாசன், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×