search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளி பலி

    கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 மணி நேரத்தில் விவசாயி மரணமடைந்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திஜி நகர் அங்கன்வாடி மையத்தில் 4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த மையத்தில் செம்பட்டி ரவுண்டானா பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராஜா (வயது 53) என்பவர் நேற்று காலை கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.அவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

    அதன்பிறகு ராஜா, மோட்டார் சைக்கிளில் நாகலட்சுமியை அருகே சமத்துவபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டு தனது வீட்டிற்கு வந்தார். அங்கு ராஜாவுக்கு திடீரென மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, அம்மையநாயக்கனூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வினோத்குமார், சக்கையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்ஜுன் பிரபு, சுகாதார ஆய்வாளர் முருகன், பச்சமலையான்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலா, செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×