search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு- ராதாகிருஷ்ணன் தகவல்

    பொது மக்களை பொறுத்த வரை மழைக்காலங்களில் நோய் தொற்று ஏற்படா வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பலர் காய்ச்சல் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தால் அந்த பகுதிகளை உடனே பார்வையிட வேண்டும்.

     

    டெங்கு காய்ச்சல்

    கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான தண்ணீர் தேங்கும் இடங்களை பார்க்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் டயர்கள், கொட்டாங்குச்சி, சிறு டப்பாக்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக கண்காணிப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூச்சியியல் வல்லுனர் மற்றும் காய்ச்சல் முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இருக்கும்.

    பொது மக்களை பொறுத்த வரை மழைக்காலங்களில் நோய் தொற்று ஏற்படா வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... நெல் கொள்முதலில் புதிய முறை விவசாயிகளை வதைப்பது கண்டனத்துக்குரியது- டி.டி.வி.தினகரன் அறிக்கை

    Next Story
    ×