search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தென்மேற்கு பருவமழை 6ந்தேதி விலகுகிறது- இந்திய வானிலை மையம் அறிவிப்பு

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் இயல்பை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை பெய்யும். இந்த ஆண்டு பருவமழை பல மாநிலங்களில் சராசரி மழை அளவை விட அதிகமாக பெய்துள்ளது.

    ஒட்டு மொத்தமான சராசரி மழை அளவை விட ஒரு சதவீதம் மட்டுமே குறைவாக பெய்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியாக 88 செ.மீ. பெய்ய வேண்டும். ஆனால் இந்த வருடம் 87 செ.மீ. மழை பெய்துள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் 2-வது முறையாக சராசரியை விட மழை அதிகம் பதிவாகியுள்ளது. 223 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 239 மி.மீ. மழை பெய்து உள்ளது. 250 மி.மீ. வரை மழை அதிகமாக பெய்துள்ளது.

    இது இயல்பான மழை அளவை விட 52 சதவீதம் அதிகமாகும். ஜூலை மத்திய முதல் ஆகஸ்டு வரையில் குறைவான மழை பொழிவு இருந்துள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் இயல்பான அளவை விட மழை அதிகம் பெய்துள்ளது. இருப்பினும் தென்மேற்கு பருவமழை 24 சதவீத பற்றாக்குறையுடன் நிறைவடைந்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் இயல்பை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில்தான் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் இயல்பான அளவை விட சற்று குறைவாக இக்கால கட்டத்தில் மழை நாடு முழுவதும் பெய்துள்ளது.

    மழை


    செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட மழை அதிகம் பெய்துள்ளது. அதாவது 110 சதவீதம் மழை பெய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் அதிக மழையை கொடுத்துள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் 152 சதவீதம் மழை பெய்துள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மழை பொழிவு 17.7 செ.மீ. ஆக இருந்துள்ளது. இது அதிகம் இல்லை என்றாலும் இயல்பை விட அதிகமாகும்.

    புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி பால் கூறும்போது, செப்டம்பர் மாதத்தில்தான் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையில் செப்டம்பர் மாத மழைதான் முக்கியமாக கருதப்படுகிறது என்றார்.

    தென்மேற்கு பருவமழை மத்திய இந்திய பகுதியில் இயல்பை விட 83 சதவீதம் அதிகமாகவும், வடமேற்கு இந்தியாவில் 40 சதவீதம் அதிகமாகவும் தென் இந்தியாவில் 24 சதவீதம் அதிகமாகவும் பெய்துள்ளது. ஆனாலும் வட கிழக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதியில் 30 சதவீதம் பருவமழை குறைவாக பெய்துள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை கிடைக்க கூடிய சாதகமான சூழ்நிலை அமைந்து இருந்தது இதற்கு ஒரு காரணமாகும்.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவிற்கு பெய்துள்ளது. வருகிற 6-ந்தேதி பருவமழை விலகுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×