search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
    X
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

    பார்த்தசாரதி கோவிலின் உண்டியல் காணிக்கை 20¾ கிலோ தங்கம், 26¾ கிலோ வெள்ளி

    பார்த்தசாரதி கோவிலில் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் மொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன.
    சென்னை :

    கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த தங்கத்தில் தேவையானவை போக, மீதமுள்ளவை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டி மூலம் கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும்’, என சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீதான மானியக்கோரிக்கையின்போது தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 2005-ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 8 கிலோ 217 கிராம் தங்க நகைகளும், 2016-ம் ஆண்டில் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 10 கிலோ 96 கிராம் தங்க நகைகளும், கடந்த 15-ந்தேதி முடிய 2 கிலோ 487 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் என மொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன. அதேபோல 26 கிலோ 714 கிராம் 760 மில்லி கிராம் வெள்ளி நகைகளும் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்று உள்ளன.

    மேற்கண்ட தகவல் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×