search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

    தென்காசி மாவட்டத்தில் 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 125.50 அடியாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகள், மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசத்தில் 5 மில்லி மீட்டரும், குண்டாறில் 4 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதியில் 2 மில்லி மீட்டரும், தென்காசியில் 1.4 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 83.15 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து இன்று காலை 85.30 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1662.85 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 504.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 100.20 அடியாகவும், மணிமுத்தாறு அணைநீர் மட்டம் 63.25 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 125.50 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 7 அடியே உள்ளது.

    குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ள நிலையில் கடனாநதி நீர்மட்டம் 63.80 அடியாகவும், ராமநதி அணைநீர் மட்டம் 59.50 அடியாகவும், கருப்பாநதி அணைநீர் மட்டம் 53.15 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் விவசாய தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே அணை மற்றும் மலைப் பகுதியில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×