search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

    மழை


    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளையும் (29-ந்தேதி)கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    இதற்கிடையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும்.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    நேற்று பெய்த மழை அளவு வருமாறு:-

    சின்னகல்லார் (கோவை)- 13 செ.மீ., வால்பாறை, சோலையாறு தலா-8 செ.மீ., சின்கோனா- 7 செ.மீ., பந்தலூர்-5செ.மீ., பெருஞ்சாணி அணை-4செ.மீ., சேலம், பெரியாறு, சிவலோகம் தலா -3செ.மீ., மங்களபுரம், ஆத்தூர், பேராவூரணி தலா-2செ.மீ., எடப்பாடி, வடக்குத்து தலா -1 செ.மீ.

    வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதே போல் கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×