search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் - ஜி.கே.வாசன்

    தமிழக அரசு, தனி மனித இடைவெளியும், முகக்கவசமும் மிக மிக அவசியம் என்பதை பொதுமக்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜிகே வாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையாக, முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் கொரோனா பரவலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் வெகுவாக குறையும்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவினால் தினசரி பாதிப்பு சுமார் 2 ஆயிரத்துக்கும் கீழ் என்ற நிலையில் இருந்தாலும், பரவல் தொடர்கிறது. பாதிப்பும் நீடிக்கிறது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு தடுப்பூசியை வழங்கி வருவதும், தடுப்பூசி செலுத்துவது அதிகரிப்பதும் ஒரு புறம் என்றால் மறுபுறம் தடுப்பூசி தட்டுப்பாடும், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் உள்ள கால தாமதமும் ஒரு குறையாகவே இருக்கிறது.

    இருப்பினும் தமிழக அரசு, தனி மனித இடைவெளியும், முகக்கவசமும் மிக மிக அவசியம் என்பதை பொதுமக்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இந்துக்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோவிலுக்கு செல்லுவதும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சபை ஆதாரதனைக்கு செல்வதும், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையில் தொழுகைக்கு செல்வதும் வழக்கமானது.

    ஆனால் கொரோனா விதிமுறைகளால் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.

    கோப்புபடம்

    ஆனால் தற்போதைய சூழலில் கொரோனாவுக்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளுக்கு சற்று தளர்வுகள் விடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    எனவே தமிழக அரசு வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கிட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...கொரோனாவை கட்டுக்குள் வைக்க இதை கடைபிடிக்க வேண்டும்- விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

    Next Story
    ×