search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூம் மீட்டிங்.
    X
    ஜூம் மீட்டிங்.

    அரசு பணி தேர்வு - வெளியூர் மாணவர்களுக்கு ஜூம் மீட்டிங் மூலம் பயிற்சி

    ஊரடங்கு காலத்தில் ‘ஆன்லைன்’ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது நேரடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி பயிற்சி இலவசமாக வழங்கப்படும். 

    கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு எழுதுவோர் பயிற்சிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இலவச பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடக்கிறது. 

    இந்தநிலையில் நேரில் வர இயலாதவர்கள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘ஜூம்‘ மீட்டிங் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘ஆன்லைன்’ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது நேரடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது. நேரில் வரமுடியாதவர், வெளிமாவட்ட மாணவர் வசதிக்காக நேரடி வகுப்பு ‘ஜூம் மீட்டிங்’ வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் திருப்பூர் மட்டுமல்லாது பிற மாவட்ட மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர் என்றனர். 
    Next Story
    ×