search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 10 நாள் பணி வழங்க கோர்ட்டு உத்தரவு

    பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் மாதத்தில் 10 நாட்கள் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    திருப்பூர்:

    தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு உதவியாக இரவு ரோந்து பணி, போக்குவரத்தை சீர் செய்தல், திருவிழா, தேர்தல் பணிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ. -560 என ரூ.2,800 வழங்கப்படுகிறது. கடந்தாண்டு அவர்களுக்கு வழங்கப்படும் பணி நாட்களை 10 நாட்களாக உயர்த்த வேண்டும் எனபா.ஜ., தலைவர் அண்ணாமலை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் மாதத்தில் 10 நாட்கள் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனையடுத்து பணி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், வழக்கு தொடர்ந்த பா.ஜ., தலைவருக்கும் உடுமலையிலுள்ள ஊர்க்காவல் படையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் வரும் காலத்தில் கூடுதல் பணி நாட்கள் வழங்கவும், கொரோனா தொற்று பரவல் காலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதற்கு சிறப்பு ஊதியம், பணியின்போது இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    Next Story
    ×