என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடத்தில் 27-ந்தேதி தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போராட்டத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
  பல்லடம்:

  பல்லடத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.

  இதில் வருகிற27-ந் தேதி, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், விலையை கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

  இதன்படி அன்று காலை 10மணிக்கு பல்லடம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல், போராட்டம் நடத்துவது எனவும், போராட்டத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

  கூட்டத்தில் தி.மு.க. கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரமசிவம், ம.தி.மு.க. சாமிநாதன், கொ.ம.தே.க. ஆறுக்குட்டி, ம.ம.க முஜிபுர் ரகுமான், மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×