search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியில் சுகாதார பணிகள்

    ஈக்கள் உற்பத்தியாகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
    அனுப்பர்பாளையம்:

    பொதுமக்கள் கோரிக்கையால், பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    திருப்பூர் முதல் மற்றும் இரண்டாம் மண்டல பகுதிகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் எடுத்துச் சென்று திருமுருகன்பூண்டி பேரூராட்சி அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.

    இங்கு குப்பை கொட்டகூடாது என அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 20-ந்தேதி அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    இந்தநிலையில் மாநகராட்சி சார்பில் பாறைக்குழி பகுதியில் கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து செல்லாத வகையில் உடனுக்குடன் பாறைக்குழியில் தள்ளப்பட்டு அதன் மேல் மண் கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஈக்கள் உற்பத்தியாகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் கிருமிநாசினி மருந்து தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் பணியும் நாள்தோறும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பணியை மாநகராட்சி முதல் மண்டல உதவி கமிஷனர் சுப்ரமணியம், சுகாதார அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டனர்.
    Next Story
    ×