search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுப்பர்பாளையம்"

    • திருமலைநகர், பெஅய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதியில் மின்தடை ஏற்படும்.
    • வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்துப்பாளையம், 15வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட் , போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சோர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திராபகுதி,

    டி.டி.பி.மில் ஒரு பகுதி, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெஅய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதியில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை 1-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிமுழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் பாலு இன்னோவேஷன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்தப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நல்லாற்றில் சென்று கலக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் வடிகால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பின் அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக பாலு இன்னோவேஷன் பகுதியிலுள்ள வடிகாலை நீட்டித்து மாநகராட்சி நிர்வாகம் வடிகால் கட்டியது. 

    ஆனால் புதிதாக கட்டப்பட்ட வடிகால் உயர்வாக இருந்ததால் பாலு இன்னோவேஷன் பகுதியிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. 

    இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி தனி தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    ஆண்டுதோறும் மழைக் காலங்களில் எங்கள் குடியிருப்பு பகுதி குளத்தில் மூழ்கியது போல் காணப்படுகிறது. தற்போது கடந்த ஒரு வாரமாக இங்கு மழைநீரும் கழிவுநீரும் சேர்ந்து அதிக அளவில் தேங்கி இருப்பதால் இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். 

    எனவே மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் முறையாக கட்டப்படாத வடிகாலை சீரமைத்து முறையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 
    போட்டியில்கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவு கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்தது.
    அனுப்பர்பாளையம்

    திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மருத்துவமனை சார்பில் நாளை 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)குழந்தைகள் தினத்தையொட்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொள்ளும் சுகன் சுகா மாரத்தான் 2021 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்த போட்டியில்கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவும் கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமுடன் முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு சுகன் சுகா மருத்துவமனை வளாகத்தில் தொடங்க இருந்த மாரத்தான் வரும் 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளரான சுகன் சுகா மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    ×