search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மழை பெய்தபோது எடுத்தபடம்.
    X
    திருப்பூரில் மழை பெய்தபோது எடுத்தபடம்.

    திருப்பூரில் வெளுத்து கட்டிய மழை-குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    இன்று மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சாரல் மழையாக பெய்த நிலையில் அதன்பிறகு பலத்த மழையாக பெய்தது.
    திருப்பூர்:

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம்  அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்  கடந்த 2 நாட்களாக  மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இன்று மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சாரல் மழையாக பெய்த நிலையில் அதன்பிறகு பலத்த மழையாக பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

    சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வெளியேறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மழையின் காரணமாக  வெப்பம் குறைந்து குளிர்ச்சி காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திருப்பூர் மாநகரில் ஒரு வாரமாக இடை இடையே பெய்த மழையால் ஆங்காங்கே சாலைகள் மிகவும் சிதலமடைந்து கிடக்கின்றன.

    மழை தண்ணீரும் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் நிலை உள்ளது.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மழையின் மூலம் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

    மேலும் சிதலமடைந்த  சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×