search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    X
    கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தர்மபுரி நகராட்சி 33 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    தர்மபுரி நகராட்சி மதிகோன்பாளையம் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் வீடுகளில் மழைநீர் புகுவதை தடுக்கவும், மழைநீர் தேங்குவதால் மலேரியா, டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் வகையில் தீவிர துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதன்படி தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. இந்த பணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து மதிகோன்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். துப்புரவு பணி மேற்கொள்ளும் அனைத்து பணியாளர்களும் முக கவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில், தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவுபடி அனைத்து கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணியை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சுழற்சி முறையில் தீவிர துப்புரவு முகாம் மேற்கொண்டு ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளையும், கழிவுகளையும் உடனே அகற்ற வேண்டும். இந்த பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    அப்போது தாசில்தார் ராஜராஜன், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், ரமணசரண், நாகராஜன், சுசீந்திரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×