search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மாடு திருடிய 4 பேர் கைது

    திருவள்ளூர் அருகே மாடு திருடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 3 மாடுகளையும் மீட்டு உரிமையாளரான கோபிநாத்திடம் ஒப்படைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிகுப்பம் வாசனம்பட்டு கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 38). இவர் தனது வீட்டில் 3 பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபிநாத் பசு மாடுகளை அருகில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது 3 மாடுகளும் காணாமல் போனது. இதனால் பதறிப்போன அவர் பல இடங்களில் தேடியும் மாடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் மாடுகளை திருடியது திருமணிகுப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (24), சரண்ராஜ் (20), காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தை சேர்ந்த முகம்மது ரசூல் (23) அக்பர் (17) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 3 மாடுகளையும் மீட்டு உரிமையாளரான கோபிநாத்திடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×