என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  மடத்துக்குளம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு பஸ்சை நிறுத்த முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  உடுமலை:

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள உடையார்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் ( வயது 65). இவர் கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். 

  அப்போது அந்த பகுதியை கடந்து சென்ற அரசு பஸ்சை நிறுத்த முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×