search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் இன்று மளிகை கடையில் தீ விபத்து

    தீ விபத்தில் சுமார் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாச மாகின.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் மற்றும் அவரது சகோதரர்கள் கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் மொத்த மளிகை வியாபாரம், துணி, பாத்திரக்கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.

    மொத்த மளிகை வியாபாரம் வணிக வளாகத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வந்தது. நேற்றிரவு பணி முடிந்ததும் பாக்கெட்களை ஒட்ட பயன்படுத்தப்படும் எந்திரத்தை அணைக்காமல் சென்றுவிட்டனர்.

    இதனால் எந்திரம் சூடாகி இன்று அதிகாலையில் தீ பிடித்துள்ளது. தீ அங்குள்ள பொருட்களில் பற்றி எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே கடை உரிமையாளர்களுக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

    சுமார் 2 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாச மாகின. தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×