search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதிய தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - தபால் ஊழியர்கள் வலியுறுத்தல்

    காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருப்பூர்;

    அகில இந்திய தபால் ஊழியர் சங்க (மூன்றாம் பிரிவு) திருப்பூர் கோட்ட 40வது மாநாடு தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது. அகில இந்திய தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.

    உதவி பொது செயலாளர் வீரமணி பேசினார். புதிய கோட்ட தலைவராக முத்துச்செல்வன், செயலாளராக வெங்கடேஷ், பொருளாளராக சரண்யா தேர்வு செய்யப்பட்டனர்.

    மத்திய அரசின் புதிய தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் இலக்கு என்ற பெயரில் பணிச்சுமை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×