search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,600 பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி

    இ.டி.ஐ.ஐ., மூலம் இந்த நிதியாண்டில் 15 ஆயிரம் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க மையத்தின் திருப்பூர் கிளை சார்பில், ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (இ.டி.ஐ.ஐ.,) இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:

    இ.டி.ஐ.ஐ., மூலம் இந்த நிதியாண்டில் 15 ஆயிரம் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 3,600 பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே தொழில் துவங்கியோருக்கு அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    தொற்று காரணமாக, நேரடி பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நீட்ஸ், யு.ஒய்.இ.ஜி.பி., பயிற்சிகளை ஆன்லைனில் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான திட்ட மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார். 
    Next Story
    ×