search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை ரூ.112 குறைந்தது

    கடந்த சில தினங்களாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மிக அதிகமாக அதிகரிப்பதும், சில நாட்களில் மிக வேகமாக குறைவதுமாக உள்ளது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் காரணமாகவும் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.

    கடந்த சில தினங்களாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மிக அதிகமாக அதிகரிப்பதும், சில நாட்களில் மிக வேகமாக குறைவதுமாக உள்ளது. இன்று (திங்கட்கிழமை) தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்தது.

    கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,355-க்கு விற்பனையானது.

    தங்கம் விலை இன்று ரூ.112 குறைந்ததால் ஒரு பவுன் விலை ரூ.34,840- ஆக இருந்தது. இன்று புரட்டாசி பவுர்ணமி தினம் என்பதால் பலரும் நகை வாங்கினார்கள். தங்கத்தின் விலை குறைந்து இருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

    வெள்ளி விலையில் கிராமுக்கு 70 காசு குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.50-க்கு விற்பனையானது.

    Next Story
    ×