search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கடந்த 8 மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 26,507 பேர் மீட்பு

    பிறந்தது முதல் ஒரு வயதுடைய 34 குழந்தைகள் இரு குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் ஒரு பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ், 3 உயர்தர ‘வென்டிலேட்டர்’ வசதியுடன் ஆம்புலன்ஸ், 21 சாதாரண ஆம்புலன்ஸ் என மொத்தம் 28 இயக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான 8 மாதத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 26, 507 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களில் 4,636 பேர் கர்ப்பிணிகள். இதில் 7 பேருக்கு மருத்துவமனைக்கு வரும் வழியில் ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்துள்ளது. 

    மொத்தம் 26 ஆயிரம் பேரில் 5,171 பேர் விபத்தில் சிக்கியவர்கள். தீக்காயத்துடன் தப்பியவர்கள் 129 பேர். பிறந்தது முதல் ஒரு வயதுடைய 34 குழந்தைகள் இரு குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். 8  மாதங்களில் கொரோனா பாதித்த 3,131 பேரை பணியாளர்கள் மீட்டுள்ளனர். 

    தொற்று பரவல் வேமெடுத்திருந்த மே மாதம் 1,337 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். வழக்கமாக ஒரு மாதத்தில் 700 முதல், 800 சாலை விபத்துகள் மாவட்டத்தில் நடக்கும். விபத்தில் காயம்பட்ட 750 பேர் சராசரியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவர். 

    நடப்பாண்டு கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே, ஜூன் இரு மாதங்களில் இரு வாரங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசியம் தவிர பிற போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் மே மாதம் விபத்தில் சிக்கியதாக 208 பேர் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில்,

    ‘உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக அழைத்து வரும் பொறுப்பு 24 மணி நேரமும் உள்ளது. ஆனால், சிலர் அவசரம் என அழைத்து நிகழ்விடத்துக்கு செல்லும் போது நோயாளி நடந்து வந்து ஆம்புலன்சில் ஏறி போகலாம் என சொல்வது வருத்தம் அளிக்கிறது. அவசர, உயிர்காக்கும் தேவைக்கு மட்டுமே 108 ஆம்புலன்ஸ் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றனர். 

    8 மாதங்களில் கொரோனா பாதித்த 3,131 பேரை பணியாளர்கள் மீட்டுள்ளனர். தொற்று பரவல் வேகமெடுத்திருந்த மே மாதம் 1,337 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றனர். 
    Next Story
    ×