என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வேதனை: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை சாய்பாபா காலனி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மகள் தருண் சங்கர் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் தருண் சங்கர் அகில இந்திய நுழைவு தேர்வுக்கு தனியார் அகாடமிக்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார்.

  இந்தநிலையில் தருண் சங்கர் நடந்து முடிந்த பிளஸ்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தந்தை அவரிடம் கேட்டு உள்ளார். மேலும் நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி உள்ளார்.

  இதனால் தருண்சங்கர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தருண் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×