search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் 2021-22ம் ஆண்டு ரூ.32.18 கோடி மதிப்பீட்டில் 4,579 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம், செட்டிக்குட்டை, செங்கப்பள்ளி ஆகிய ஊராட்சி பகுதிகளில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை கலெக்டர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

    அப்போது அவர் பேசியதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் 2021-22ம் ஆண்டு ரூ.32.18 கோடி மதிப்பீட்டில் 4,579 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இதில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் அ.பெரியபாளையம் ஊராட்சி நல்லகட்டிபாளையத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலான புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், கோவிந்தம்பாளையத்தில் ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள்.

    மேலும் எஸ்.பெரியபாளையம் ஊராட்சி பாரப்பாளையத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 1.4 கி.மீட்டருக்கு ரூ.32.28 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.3.35 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இந்த பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார். ஆய்வின்போது ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×