என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமுருகன் பூண்டியில் செதுக்கப்பட்ட முத்துமாரியம்மன் சிலை பிரான்ஸ் நாட்டில் பிரதிஷ்டை
Byமாலை மலர்16 Sep 2021 6:52 AM GMT (Updated: 16 Sep 2021 6:52 AM GMT)
பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதாக உள்ளதாக சிற்பிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழிலுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பிரசிடெண்ட் வில்சன் என்ற இடத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட முத்துமாரியம்மன் அம்பாள் கோவிலுக்கு முத்துமாரியம்மன் சிலையை வடிவமைத்து தருமாறு திருமுருகன்பூண்டி ஸ்ரீதிருமுருகன் பழனிவேல் சிற்பக்கலைக்கூட நிர்வாகத்திடம் கோவில் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பி சங்கர் உள்ளிட்ட குழுவினர் 1 டன் எடை கொண்ட கருங்கல்லில் 4 1/2 அடிஉயரத்தில் முத்துமாரியம்மன் சிலையை தத்ரூபமாக செதுக்கி கடந்த மாதம் விமானம் மூலமாக பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்குள்ள கோவிலில் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வாழ் தமிழர்களும், இந்தியர்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சிற்பி குமாரவேல் கூறும்போது:
பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சிலைகளை செதுக்கி இருந்தாலும், தற்போது எங்கள் கைகளால் செதுக்கப்பட்ட சிலை பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதாக இருப்பது மட்டுமின்றி, திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழிலுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றார்.
Next Story
×