என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  நெல்லை மாநகர பகுதி டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாளை வி.எம். சத்திரம், மணிக்கூண்டு, கலைவாணி தியேட்டர் வளாகம், தெற்கு பைபாஸ் ரோடு ஆகிய 4 டாஸ்மாக் கடைகளில் ‌ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர்.
  நெல்லை:

  பாளை வி.எம். சத்திரம், மணிக்கூண்டு, கலைவாணி தியேட்டர் வளாகம், தெற்கு பைபாஸ் ரோடு ஆகிய 4 டாஸ்மாக் கடைகளில் ‌ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் ரூ.20 ஆயிரம் மற்றும் 40 மதுபாட்டில்கள் கொள்ளை போயிருந்தது. இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, தலைமை காவலர்கள் சரவணன், அந்தோணி, ஜேசுராஜ் ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் கொள்ளையனை தீவிரமாக தேடிவந்தனர்.

  போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொள்ளையில் ஈடுபட்டது செட்டிகுளத்தை சேர்ந்த அந்தோணி (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×