search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மழைநீர் சேகரிப்பு திட்டம் - மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

    பெரும்பாலான வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு இல்லாததால் வீடுகளின் மொட்டை மாடியில் குளம் போல் தண்ணீர் தேங்கி வீதிகளில் வழிந்தது.
    அவிநாசி;

    திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு முன் இதே காலகட்டத்தில், நிரம்பியிருந்த குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. 

    அவ்வப்போது பெய்யும் மழை போதுமானதாக இருப்பதில்லை. திருப்பூர், அவிநாசியில் சமீபத்தில் பெய்த மழையில் பெருக்கெடுத்த வெள்ளம் வீதிகளில் ஆறாக ஓடியது.

    பெரும்பாலான வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு இல்லாததால் வீடுகளின் மொட்டை மாடியில் குளம் போல் தண்ணீர் தேங்கி வீதிகளில் வழிந்தது.

    ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் பலன் இல்லை. புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுவும் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    மழைநீர் சேகரிப்பு காலத்தின் அவசியமாக மாறியிருக்கிறது. வீடுகளின் கூரை, மொட்டை மாடியில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரை தொட்டி அமைத்து சேகரித்து வைக்கலாம். தொட்டி அமைக்க இடம் இல்லாத பட்சத்தில் நிலத்தடிக்கு செல்லும் வகையில் நீர் செறிவூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தலாம்.

    விவசாய நிலங்களில் மழைநீர் வழிந்தோடி வரும் வழித்தடங்களில் கால்வாய் அமைத்து  பண்ணை குட்டை அமைத்து அதில் தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×