search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆடை உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் - ஏ.இ.பி.சி., வரவேற்பு

    இத்திட்டமானது ரூ.10,683 கோடி முதலீடு சார்ந்த திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
    திருப்பூர்:

    செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏ.இ.பி.சி.,) வரவேற்பு அளித்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் ஏ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, வணிகம், தொழில் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ்கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இத்திட்டமானது ரூ.10,683 கோடி முதலீடு சார்ந்த திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக செயற்கை நூலிழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறைக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமையும். 

    இந்த திட்டம் மிகப்பெரிய விகிதத்தில் புதிய முதலீடு, உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்துதல் மற்றும் ஏற்றுமதிகளை பலமடங்கு அதிகரிக்க செய்யும்.

    மேலும் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி உலக ஜவுளி சந்தையில் முக்கியமான இடத்தைப் பிடிக்க உதவும். மேலும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றார்.
    Next Story
    ×