search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.
    X
    ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

    பல்லடத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்

    வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், 12-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். பல்லடம் தாசில்தார் தேவராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர் விநாயகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் வரவேற்றார்.

    இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் பேசியதாவது:

    சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில்  பல்லடம், பொங்கலூர் ஒன்றியங்கள், பல்லடம் நகராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடதிட்டமிட்டுள்ளது.

    அதற்கான தடுப்பூசிகள் 27 மையங்களில் இருப்பு வைக்கப்படவுடள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் தீவிரமாக களப்பணியாற்றி இந்த சிறப்பு கொரோனோ தடுப்பூசி முகாமை வெற்றியடையச் செய்ய வேண்டும்.  

    வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டும் நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் தடுப்பூசி போடச்செய்ய வேண்டும் என்றார்.  

    இதில் கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார், சாமளாபுரம் செயல்அலுவலர் ஆனந்தகுமார், சுகாதாரத்துறை அலுவலர் சுடர்விழி, கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×