search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள்.
    X
    களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள்.

    உடுமலை - மடத்துக்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாசு ஏற்படுத்தாத களிமண் சிலைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
    மடத்துக்குளம்:

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடைவிதித்துள்ளது. இதனால் வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். 

    இந்தநிலையில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. வெகுவாக இதன் விற்பனை சரிந்துள்ளது. ஆனால் சிறிய வகையிலான விநாயகர் சிலைகளை அதிகம் வாங்கி செல்கின்றனர். 

    மடத்துக்குளம், உடுமலை பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகம் வாங்கி செல்கின்றனர். 

    இதுகுறித்து உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே கடை வைத்துள்ள வியாபாரி கூறுகையில்:

    கால் அடி முதல் 3 அடி வரையுள்ள சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டுள்ளது. இதனை வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    சிலைகள் ரூ.30 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் சிறிய சிலைகளையே வாங்குகின்றனர் என்றனர்.
    Next Story
    ×