search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்குகிறது

    மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்பூர்:
      
    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 82 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 828 ஆக உயர்ந்துள்ளது. 

    மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். 

    இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 933 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியும் தினமும் நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 36 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 12 லட்சத்து 17 ஆயிரத்து 611 பேருக்கும் இரண்டாவது டோஸ் 2 லட்சத்து 17 ஆயிரத்து 714 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 

    அதிகபட்சமாக ஆகஸ்ட் 28-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

    மாவட்டத்தில் தோராய மக்கள் தொகை 27 லட்சம். இவர்களில் 48 சதவீதம் அதாவது 14.36 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும். சில நாட்களில் இது 50 சதவீதத்தை நெருங்கும் என்றனர்.
    Next Story
    ×