search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    1½ வருடத்துக்கு பிறகு மதுரை-கொழும்பு விமான சேவை தொடங்கியது

    மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் மூலம், விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    மதுரை:

    கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 1½ வருடத்திற்கு பின் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து 38 பயணிகள் நேற்று மதுரை விமான நிலையம் வந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் மூலம், விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதேபோல் மதுரையில் இருந்து இலங்கைக்கு 76 பயணிகள் அதே விமானத்தில் புறப்பட்டு கொழும்பு சென்றனர். கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே இந்த விமான சேவை உள்ளது. அதன்படி, இலங்கையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். மீண்டும் 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு இலங்கை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×