search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை -சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    கேரளாவில் இருந்து வருவோர் அனைவரும் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    சென்னை:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரசுக்கு பலியாகி உள்ளான் இதனை கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் இன்று உறுதி செய்தார். 

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது பற்றிய தகவல் மத்திய சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதார துறையின் தேசிய நோய்தடுப்பு ஆலோசனை குழுவை கேரளா அனுப்பி வைத்துள்ளனர்.

    கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழகத்திலும் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்டத்தில் உஷார் நடவடிக்கைகளை குமரி மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. கேரளாவில் இருந்து வருவோர் அனைவரும் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட சான்றிதழ், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக எல்லையில் சுகாதார துறையின் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், எல்லை பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனாவோ, நிபாவோ மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் அனைத்து காய்ச்சல் பாதிப்புகளையும் கண்காணித்து வருகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×