search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வாலிபர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதான வாலிபர்களை படத்தில் காணலாம்.

    பனியன் கம்பெனி உரிமையாளர் ஜீப் திருட்டு-சி.சி.டி.வி.,காமிரா மூலம் சிக்கிய வாலிபர்கள் கைது

    வீட்டிற்கு செல்வதற்காக கம்பெனியை பூட்டி விட்டு ஜீப்பை எடுக்க வந்தார். அப்போது குமார் நிறுத்தியிருந்த இடத்தில் ஜீப்பை காணவில்லை.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42) . சென்னிமலை பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2-ந்தேதி குமார் தனது ஜீப்பை கம்பெனி முன் நிறுத்திவிட்டு சாவியை அதில் மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக கம்பெனியை பூட்டி விட்டு ஜீப்பை எடுக்க வந்தார். அப்போது குமார் நிறுத்தியிருந்த இடத்தில் ஜீப்பை காணவில்லை. 

    அப்பகுதியில் தேடி பார்த்தும் ஜீப் கிடைக்கவில்லை. இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் போலீசார் பல்லடம், கணபதிபாளையம், சின்னக்கரை ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் ஜீப்பை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்து தேடிவந்த நிலையில் நேற்று மாலை சின்னக்கரை தனியார் கல்லூரி முன்பு 2 பேரும் நின்றிருந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
       
    விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த சதீஷ் (31), புதுக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து (26) என்பதும், இருவரும் திருப்பூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் ஜீப்பை திருடி கொண்டு செல்லும் வழியில் காங்கயம் படியூர் அருகே ஜீப் பழுதாகி நின்று விட்டதாகவும், அதனால் ஜீப்பை அங்கேயே விட்டு விட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் அமலதாஸ், போலீசார் லட்சுமணன், மதிவாணன், சேதுமாதவன், ஜெகன், விஜயகுமார், வேல்முருகன் ஆகியோரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங்சாய் பாராட்டினார்.
    Next Story
    ×