search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நொய்யல் ஆற்றில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

    நொய்யலாற்றில், தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. டி.டி.எஸ்., சீராகவே உள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் சரவணகுமார் தலைமையில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 2  நாட்களாக நொய்யல் ஆற்றங்கரையோரம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அப்போது அக்ரஹாரபுத்தூர், ஆண்டிபாளையம், காசிபாளையம், அணைப்பாளையம் என 4 இடங்களில் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அக்ரஹாரபுத்தூரில் 2,060 டி.டி.எஸ்., ஆக இருந்த தண்ணீர், மழைநீர், சாக்கடை கழிவுநீர் கலப்பால் அடுத்தடுத்த பகுதிகளில் 1,900 டி.டி.எஸ்., ஆக குறைந்து காணப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

    நொய்யலாற்றில், தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. டி.டி.எஸ்., சீராகவே உள்ளன. சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் மழைநீர் விழுந்து சாயநீர் வெளியேற வாய்ப்பு உள்ளது.

    எனவே மழைநீர் புகாதவாறு தொட்டிகள் நிரம்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சாயக்கழிவுநீர் வெளியேறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சாய ஆலை துறையினருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×