search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நாமக்கல் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை

    மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மல்லசமுத்திரம், சின்னமுதலைப்பட்டி உள்பட 6 பள்ளிகளில் சுமார் 500 மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×