என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Byமாலை மலர்28 Aug 2021 9:47 AM GMT (Updated: 28 Aug 2021 9:47 AM GMT)
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படித்த பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
திருப்பூரில் நாளை தி.மு.க. சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படியும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படியும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் திருப்பூரில் நாளை (29-ந்தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டபடிப்பு, என்ஜினீயரிங் படித்த பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
7 பெரிய தனியார் நிறுவங்களின் பங்களிப்போடு நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமினை இளைஞர்கள், இளம் பெண்கள் தவறாமல் பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×