search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முழு கொள்ளளவை எட்டிய மஞ்சளாறு அணை நீர்மட்டம்

    கனமழையால் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. 57 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 1 வாரத்துக்கு முன்பே 55 அடியை எட்டியது. இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    அதன் பிறகு தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கும்பக்கரை, சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பெரியகுளம் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் மஞ்சளாறு அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து அணைக்கு வரும் 95 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணை இந்த ஆண்டின் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதனை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×