search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.ஏ.பி., கால்வாய்
    X
    பி.ஏ.பி., கால்வாய்

    உடுமலை அருகே புதர் மண்டி கிடக்கும் பி.ஏ.பி., கால்வாய் பாதை-அதிகாரிகள், பொதுமக்கள் தவிப்பு

    கண்காணிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக, பி.ஏ.பி., கால்வாய் கரையிலுள்ள பாதைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    உடுமலை:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்திலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், பூலாங்கிணறு, புதுப்பாளையம், கோமங்கலம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் வாயிலாக  பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய்கள் கட்டப்படும் போதே  கரையில்  வாகனங்கள் செல்லும் வகையில் மண் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாதையை பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கண்காணிப்புக்கும்  விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.

    சில கிராமங்களுக்கு இணைப்புப்பாதையாகவும் கால்வாய் பாதைகள் இருந்தது. முன்பு பொதுப்பணித்துறையால் குறிப்பிட்ட இடைவெளிகளில் இப்பாதைகளில், முட்புதர்களை அகற்றி பராமரித்து வந்தனர்.

    பின்னர் பாதையை மேம்படுத்தும் வகையில் சில பகுதிகளில் ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாதை பராமரிப்பில் பொதுப்பணித்துறை அக்கறை காட்டாமல் உள்ளது. இதனால் பெரும்பாலான பாதைகள் முட்புதர் மண்டி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    மேலும்  பிரதான கால்வாய் கரையில் கற்கள் பெயர்ந்து பரிதாப நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறையினர் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் ரோந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

    விவசாயிகளும் தங்களுக்குரிய மடைகளை, சென்று பார்ப்பது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் பரிதாப நிலையிலுள்ள, கால்வாய் கரைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×