search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மன்னார்குடியில் கஞ்சா விற்றவர் கைது

    மன்னார்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    மன்னார்குடி தாமரைக்குளம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த உப்புக்காரதெரு கோரிமேடு பகுதியை சேர்ந்த முருகன் (வயது48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×