search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வடமாநில வாலிபர்கள்.
    X
    கைதான வடமாநில வாலிபர்கள்.

    திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் கைது

    வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு மேலே வர மறுத்ததாக தெரிகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 7 டவுன் பஸ் குளத்துபாளையத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் 10 க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  ஏறினர். பஸ் கண்டக்டர் குமரேசன் (33) அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து வந்துள்ளார்.

    அப்போது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு மேலே வர மறுத்ததாக தெரிகிறது. பலமுறை மேலே வரும்படி கூறியும் அவர்கள் மேலே வராததால் பயணிகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்துள்ளனர். 

    இதனால் கண்டக்டர் குமரேசனுக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனையடுத்து பஸ் டிரைவர் பஸ்சை நேராக வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார். போலீசில் கண்டக்டர் குமரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆசாத் மாண்டால் (19), ஜெய் சங்காய் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×