search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாகும் கொடைக்கானல்

    இந்தியாவிலேயே முதன்முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 3-ம் அலை அறிகுறி தென்படுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தபோது சுற்றுலா நகரான கொடைக்கானல், ஆன்மீகநகரான பழனி நகராட்சியில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனைதொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    இதனால் கொடைக்கானல் நகராட்சியில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் 150-க்கும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். அவர்களுக்கும் 2 நாட்களில் செலுத்தப்பட்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாற உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்திர் இதுவரை 5லட்சத்து 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 94 பேருக்கும், 2-வது டோஸ் 94 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பழனியில் 68 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×