search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
    பல்லடம்:

    ஆண்டு தோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக கிராம மக்கள் தங்களது பகுதியின் அடிப்படை தேவைகள், திட்டங்கள் குறித்து விவாதிப்பதுடன் தீர்மானங்களையும் நிறைவேற்றுகின்றனர்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்ற வழியின்றி உள்ளனர். 

    தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனவே ஆகஸ்ட் 15-ந்தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    Next Story
    ×