search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த துரைராஜை படத்தில் காணலாம்.
    X
    கடத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த துரைராஜை படத்தில் காணலாம்.

    செல்போன் கோபுரத்தில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை மிரட்டல்

    ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ததால் கடத்தூரில் லாரி டிரைவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடத்தூர்:

    சென்னை வெள்ளைச்சாமி தெரு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் துரைராஜ் (வயது 36). இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவியுடன் பொம்மிடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவர் ஓட்டி சென்ற லாரி மோதிய விபத்தில்ஒருவர் பலியானார்.

    இதனால் விபத்து ஏற்படுத்தி மரணம் விளைவித்ததாக பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு துரைராஜை நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் சென்னையில் இருந்து கடத்தூருக்கு வந்தார்.

    அங்கு மது வாங்கி குடித்ததும் போதை தலைக்கேறியதால் துரைராஜ் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து நேற்று காலை 7 மணி அளவில் கடத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள 80 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரது கூச்சல் கேட்டு பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று துரைராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கீழே இறங்கி வந்த அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விபத்து காரணமாக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தற்ெகாலைக்கு முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அவரது மனைவியை வரவழைத்து போலீசார் அனுப்பி வைத்தனர். செல்போன் கோபுரத்தில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×