search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் - விசைத்தறியாளர்களுடன் பேச்சுவார்த்தை

    புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை சார்பில் விசைத் தறியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    பல்லடம்:

    விசைத்தறியாளர்களுக்கு புதிய கூலி உயர்வு வழங்கப் படாததால் தொழிலாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்தநிலையில் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை சம்பந்தமாக விசைத்தறியாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி,செயலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கூறியதாவது: 

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலிஉயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் விசைத்தறி தொழிலில் லாபம் ஈட்ட முடியவில்லை.

    இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் நிலையில் 2017 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை, பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக அமைச்சர்கள், திருப்பூர், கோவை, மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை சார்பில் விசைத்தறியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×