search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    20லட்சம் பேருக்கு 10லட்சம் பேர் மட்டுமே உள்ளனர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு சரணாலயமாக திகழும் திருப்பூர்

    கொரோனா 2-வது அலையின் போது வடமாநில தொழிலாளர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர் பலரும் திருப்பூரில் இருந்து வெளியேறினர். தளர்வுகள் தொடங்கும் போது தொழிலாளரின் தேவை மெல்ல மெல்ல அதிகரித்தது.
    திருப்பூர்:

    கொரோனா 2-வது அலையின் போது வடமாநில தொழிலாளர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர் பலரும் திருப்பூரில் இருந்து வெளியேறினர். தளர்வுகள் தொடங்கும் போது தொழிலாளரின் தேவை மெல்ல மெல்ல அதிகரித்தது. 

    கொரோனா இரண்டு அலைகளிலுமே வாழ்வாதாரப் பிரச்சினைகள் முக்கியமானதாக இருந்தன. வருவாய் இழப்பு, வேலை இழப்பு போன்றவை, பொதுமக்களை கடுமையாக பாதித்தன வேலை இழப்பு இல்லாதவர்களுக்கு கூட  வருவாய் இழப்பு அல்லது குறைவு என்பது ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள் அளவிட முடியாதது. 

    குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் பலர் வேலை இழந்திருக்கின்றனர். சிறு, குறுந்தொழில்கள் முடங்கின.குறிப்பாக ஊரடங்கை தொற்று தடுப்பின் கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

    இந்தநிலையில் பேரிடர்களுக்கு மத்தியிலும் வேலைவாய்ப்பு என எடுத்துக்கொண்டால் திருப்பூர் எப்போதும் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு சரணாலயமாக திருப்பூர் உள்ளது.
    முதல் மற்றும் இரண்டாவது அலையில் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது உண்மை என்றாலும் ஊரடங்கு தளர்வுகள் வந்தபோது  தொழிலாளருக்கு மீண்டும் வேலை காத்துக்கொண்டிருந்தது திருப்பூரில் தான். 

    தொழிலாளர் தேவை அதிகம் இருந்தாலும்கூட பின்னலாடை சார்ந்த ஒவ்வொரு துறையிலுமே, அனுபவத்திற்கு முன்னுரிமை உண்டு. தொழில் பழகுநர்கள் அதிகம் தேவைப்பட்டாலும்கூட திறன் வாய்ந்த தொழிலாளர் கிடைத்துவிட்டால் அது நிறுவனத்துக்கு பெரும் வரப்பிரசாதம். 

    நவீனக்கருவிகள், எந்திரங்கள் வந்தாலும்கூட தொழிலாளரை சார்ந்துதான்  பின்னலாடை கூடங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாவது அலையின் போது வடமாநில தொழிலாளர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர் பலரும் திருப்பூரில் இருந்து வெளியேறினர். 

    தளர்வுகள் தொடங்கும் போது தொழிலாளரின் தேவை மெல்ல மெல்ல அதிகரித்தது. தற்போதுகூட  முழுமையான அளவில் தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பவில்லை.மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு, தடுப்பூசியை இன்னும் முழுமையாக அனைவருக்கும் செலுத்த இயலாமை போன்றவை இதற்கு காரணங்கள். 

    ஆனால் பின்னலாடை நிறுவனங்கள் ஒவ்வொன்றுமே தாங்கள் பெற்ற ஆர்டர்களுடன் தொழிலாளருக்கு வேலை கொடுக்க காத்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக அதிகரித்தது. 

    அது மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பான (சி.எம்.ஐ.இ.,) நாட்டின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

    திருப்பூரை பொறுத்தவரை இத்தகைய புள்ளி விவரங்கள் புறக்கணிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. வேலை இழப்பை எதிர்கொண்டவர்கள் கூட புதிய வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்ற நகரமாக திருப்பூர் இருக்கிறது. திருப்பூருக்கு 20 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவர். ஆனால், இருப்பதோ 10 லட்சம் பேர்தான். எனவே மனிதவளம் எவ்வளவு இருந்தாலும், திருப்பூருக்குத் தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. 

    படித்தவர், படிக்காதவர், தொழில்நுட்பம் அறிந்தவர், அறியாதவர் என அனைவருக்கும் அவரவருக்குரிய தகுதி அடிப்படையில் பணி வாய்ப்புகள் கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு கைகொடுக்கும் நகரமாக திருப்பூர் உள்ளது.
    Next Story
    ×