search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10ஆயிரம் கடன்

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இல்லாதவர்களும் விண்ணப்பிக்க கடித முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இதில் 10 ஆயிரம் ரூபாய் எளிய கடன் திட்டம் மூலம் வியாபாரிகள் பயனடைந்தனர். ஓராண்டுக்குள் மாத தவணையில் இது திரும்ப செலுத்தப்பட வேண்டும். 

    நடப்பாண்டு கடந்த 1-ந்தேதி மீண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க அடையாள அட்டை அல்லது வியாபார சான்று  அவசியமாக இருந்தது. இந்த ஆவணம் இல்லாத வியாபாரிகளும் பயனடையும் வகையில் சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இல்லாதவர்களும் விண்ணப்பிக்க கடித முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு வழங்கும் கடிதம் மூலமும் விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் கடந்தாண்டு 3 ஆயிரம் பேர் இதில் பயனடைந்தனர். நடப்பாண்டு 1,400 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் வியாபாரிகளிடம் இதற்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் பங்கேற்று தங்கள் விண்ணப்பங்களை அளித்தனர்.

    Next Story
    ×