search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீட் தேர்வு-பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு

    மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 6-ந்தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:

    நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சில மாணவர்கள் தவறு செய்கின்றனர். கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வு விண்ணப்பங்களை நிரப்ப உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×